fbpx

ஆஸ்கர் பக்கத்தில் இடம் பெற்ற தீபிகா படுகோன் நடித்த பாடல்!!

பாஜிராவ் மஸ்தானி படத்திலிருந்து தீபிகா படுகோன் நடித்த ‘தீவானி மஸ்தானி’ பாடலின் சிறு கிளிப் ஆஸ்கர் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

2015 ஆம் ஆண்டு சஞ்சய் லீலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாஜிராவ் மஸ்தானி. இப்படத்தில் பாஜிராவ் வேடத்தில் ரன்வீர் சிங்கும், மஸ்தானியாக தீபிகா படுகோனும் நடித்துள்ளனர். வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் மராட்டிய நாவலில் கதையாக மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தீவானி மஸ்தானி’ பாடல் ஆஸ்கரின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. தி அகாடமியால் வீடியோ பகிரப்பட்ட உடனேயே, ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்தப் பாடலுக்காக தீபிகா படுகோனே 20 கிலோ எடையுள்ள ஆடை அணிந்து நடனமாடியது குறிப்பிடதக்கது. ”பாஜிராவ் மஸ்தானி ஒரு தலைசிறந்த படைப்பு, அதற்கு ஒருபோதும் வயதாகாது” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.

https://www.instagram.com/theacademy/?utm_source=ig_embed&ig_rid=48cbb7c9-5535-463a-9749-6e863f10dd38

Next Post

Election 2024 | "எலக்சன் கமிஷனே ஒரு நாடக கம்பெனி தானே"… பிரச்சாரத்தில் கொந்தளித்த சீமான்.!!

Thu Apr 4 , 2024
Election 2024: தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி போல செயல்படுகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2024 ஆம் வருட பொதுத்தேர்தல்(Election) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் நடைபெற இருக்கிறது. இந்த பொது தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக தேர்தல் […]

You May Like