fbpx

தகுதி சுற்றில் தோல்வி!… ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்!…

தகுதிச்சுற்றில் தோல்வியடைந்ததையடுத்து நடப்பாண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது.

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
இதில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து சிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் , ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. இந்த சுப்பர் 6 தொடரில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் – ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின.

முதலில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சார்லஸ் ரன் ஏதும் எடுக்காமலும், கிங் 22 ரன்களுக்கும், அடுத்து களம் இறங்கிய புரூக்ஸ் டக் அவுட், ஹோப் 13 ரன்கள், மேயர்ஸ் 5 ரன்கள், பூரன் 21 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து அந்த அணி, 43.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி மோசமான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஹோல்டர் மட்டுமே ஓரளவுக்கு விளையாடி, 45 ரன்கள் எடுத்திருந்தார்.

ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பு மற்றும் 6.3 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. ஸ்காட்லாந்து வீரர்கள் மேட் கிராஸ் (107 பந்துகளில் 74 நாட் அவுட்), பிரண்டன் மெக்முல்லன் (106 பந்துகளில் 69) ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர். இந்த தோல்வியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதன்மூலம் 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல் 10 அணிகளில் இடம்பெறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறை.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டு முறை (1975 மற்றும் 1979) சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி இல்லாமல் நடைபெறபோகும் முதல் உலகக்கோப்பையாக இது அமையப்போகிறது. தகுதி சுற்று ஆட்டங்களில் மேற்கிந்திய தீவுகள் அணி, அமெரிக்காவை (35 ரன்கள் வித்தியாசத்தில்) மற்றும் நேபாளத்தை (101 ரன்கள் வித்தியாசத்தில்) தோற்கடித்து இருந்தாலும், ஜிம்பாப்வேயிடம் தோல்வி, சூப்பர் ஓவர் எலிமினேட்டர் முறையில் நெதர்லாந்திடம் தோல்வி என்று, மற்ற அணிகளை விடக் குறைவான புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் இல்லாமலே சூப்பர் சிக்ஸ் சுற்றில் நுழைந்தது. தற்போது ஸ்காட்லாந்திடமும் தோல்வி கண்டதன்மூலம் முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ரூ.4 கோடி மதிப்புள்ள காளை!... இறைவனுக்கு பலியிட்டு இறைச்சிகளை ஏழைகளுக்கு வழங்கிய ஷாகித் அப்ரிதி!

Sun Jul 2 , 2023
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.4 கோடிக்கு வாங்கிய காளையை இறைவனுக்கு பலியிட்டு அதன் இறைச்சியை ஏழைகளுக்கு வழங்கியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிதி . உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இது ஹஜ் பெருமாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை பறைசாற்றும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்கு […]

You May Like