மத்திய அரசின் பாதுகாப்பா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ரீசார்ஜ் அசோசியேட் பணிகளுக்கான காலியாக உள்ள நான்கு இடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை இணையதளம் மூலமாக வெளியிட்டு இருக்கிறது பாதுகாப்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்.
இந்த அறிவிப்பின்படி வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிப்பவர்கள் 28 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பொறியியல் பட்டப்படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.டெக் மற்றும் எம். டெக் படித்தவர்களும் இந்த ஆராய்ச்சி பணிக்காக விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக: ரூ.31,000 முதல் ரூ.54,000 வரை வழங்கப்படும்.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 06.04.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் ஜோத்பூரில் பணியமரத்தப்படுவார்கள் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு பற்றிய பிற தகவல்களை அறிய drdo.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம் .