மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செமஸ்டருக்கான புதிய அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை வரலாற்றில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 4ஆம் தேதி நடைபெறவிருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. எனவே மறுதேதி விரையில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி, செமஸ்டருக்கான புதிய அட்டவணையை இன்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 11ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.