கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே அடூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுமேஷ் (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் சுமேஷ், தன்னுடைய காதலியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியிடம் பல ஆசைவார்த்தைகளை கூறி, உடலுறவு செய்ய ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். பின்னர், இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
பின்னர், சுமேஷ் தன்னுடைய நண்பர்கள் சக்தி (18), அனூப் (22), அபிஜித் (20) மற்றும் அரவிந்த் (28) ஆகியோருக்கு போன் செய்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். அவர்களை பார்த்ததும் பதறிப்போன மாணவி, அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், மாணவியை மிரட்டி அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், எல்லாம் முடிந்ததும் மாணவியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் மாணவி கூறவில்லை. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பள்ளியில் குழந்தைகள் நல அமைப்பினர் மாணவிகளுக்கு கவுன்சலிங் நடத்தினர். அப்போது அந்த மாணவி, தன்னை காதலன் சுமேஷ், அவரது நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த விவரத்தை கூறி அழுதுள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பினர் அடூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியை பலாத்காரம் செய்த 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.