fbpx

டேய் பரமா… இந்த வருஷமும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முடியாதா..? அதிரடி முடிவை எடுத்த முதலமைச்சர்..!!

நாட்டிலே காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த மாநிலமாக டெல்லி உள்ளது. உலகிலேயே மிகவும் மோசமாக காற்று மாசுபாடுள்ள நகரங்களில் டெல்லியும் ஒன்றாக இருப்பது மக்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இந்தாண்டும் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் கடை வைப்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

”சந்திரயான் - 3 இறங்கிய இடத்தில் விண்வெளி மையம்”..!! மயில்சாமி அண்ணாதுரை சொன்ன குட் நியூஸ்..!!

Mon Sep 11 , 2023
கோவை மாவட்டம் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களை வரவேற்கும் விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், “மாணவர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிலவில் ஒன்றுமில்லை என முதலில் சென்றவர்கள் சொன்னார்கள். இந்தியரின் தனி வழிதான் சந்திராயன். அந்த தனி வழியில் சென்றதால் நீர் இருப்பதை கண்டுபிடித்தோம்” எனத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பொறியியல் […]

You May Like