fbpx

’அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், சீருடைகள் வழங்குவதில் தாமதம்’..! வெளியான முக்கிய அறிக்கை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், குறிப்பேடு, சீருடை வழங்குவதில் தாமதம் செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களில் 60% மட்டுமே பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பேடுகள் (நோட்டுப் புத்தகம்), சீருடைகள் ஆகியவை யாருக்கும் இன்னும் வழங்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது. திட்டமிடலில் ஏற்பட்டத் தவறு தான் இந்தக் குழப்பங்களுக்கு காரணம். பாடநூல்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்பட்டதால் தான் 40% மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. சீருடைகள் தயாரிப்பதற்கான ஆணை மிகவும் தாமதமாகவே வழங்கப்பட்டிருக்கிறது.

ராமதாஸின் திடீர் ஆவேசப் பேச்சு, எமோஷனல் அட்வைஸ்!' - பா.ம.க-வினரை  உத்வேகப்படுத்தவா, உசுப்பிவிடவா? | political critics share their views on  pmk leader Ramadoss attitude

மாணவர்களுக்கு 3 கோடி குறிப்பேடுகள் அச்சிட ஆணை வழங்கப்பட்டு, அவற்றில் 75% அச்சிடப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டும் அவை இன்னும் வழங்கப்படவில்லை. பாடநூல்களும், குறிப்பேடுகளும் இல்லாததால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. கற்றலின் அடிப்படைத் தேவைகளை வழங்குவதில்கூட பள்ளிக்கல்வித்துறை அலட்சியம் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்த ஒரு வாரத்திற்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்களும், குறிப்பேடுகளும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்”. இவ்வாறூ அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

வரும் 10ஆம் தேதியே அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னையில் ஆஜராக வேண்டும்..! தலைமைக் கழகம் உத்தரவு

Fri Jul 8 , 2022
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வரும் 10ஆம் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டப வளாகத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. பொதுக்குழு தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வந்தாலும், மற்றொரு புறம் பொதுக்குழு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை கழகம் செய்து […]
பொதுக்குழு வழக்கு..! அதிமுக தலைமை கழக நிர்வாகிகளும் சுப்ரீம் கோர்ட்டில் திடீர் மனு..!

You May Like