fbpx

பெற்றோரிடம் தெரிவிக்காமலேயே குழந்தைகளின் பெயர் நீக்கம்..!! உடனே இந்த பிரச்சனை என்னன்னு பாருங்க..!!

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகளில் குழந்தைகளின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஆதாரை இணைக்கவில்லை என்று கூறி குழந்தைகளின் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் 2 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரத்து 246 ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. இந்த கார்டுகளுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் விநியோகிகப்படுகிறது. தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் எல்லாம் ஸ்மார்ட் கார்டுகளாக மாறிய பின்னர், பொருட்கள் வழங்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைக்கப்பட்டு எத்தனை குடும்ப உறுப்பினர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதோ, அத்தனை குடும்ப உறுப்பினர்களின் அடிப்படையில் அரிசி, சர்க்கரை ஆகிய பொருட்கள் வழங்கப்படுகிறது.

அதுவும் எப்படி என்றால், ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது. இதுவரை 6 கோடியே 96 லட்சத்து 15 ஆயிரத்து 417 பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதேநேரம் 4,82,778 பேர் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. குடும்ப அட்டைகளில் ஆதாரை அனைவருக்கும் கண்டிப்பாக இணைக்க வேண்டும். அப்படி இணைக்காத குடும்ப உறுப்பினர்கள் பெயர் குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கப்படுகிறது. அவர்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால் பொருட்கள் வழங்கப்படும் அளவும் குறைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆதார் இணைக்காதவர் யார் யார் என்பதை கண்டுபிடித்து, அவர்களை குடும்ப அட்டையில் இருந்து நீக்கம் செய்யும் பணியில் உணவுத்துறை ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கும்போது குழந்தை இருந்தால், குழந்தையின் பிறப்புச்சான்றிதழை இணைத்து விண்ணப்பித்தாலே குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. ஆனால், பின்னர் குழந்தைக்கு ஆதார் எண் பெற்றிருந்தால், அதை இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இணைக்காதபட்சத்தில், குடும்ப அட்டைதாரர்களிடம் தெரிவிக்காமலேயே, குழந்தைகளின் பெயர்கள் அட்டையில் இருந்து நீக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே, குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்காவிட்டால் உடனே ஆதார் கார்டு எடுங்கள். அந்த எண்ணை குடும்ப அட்டையில் சேருங்கள். அப்படி சேர்க்காவிட்டால் உங்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவு குறைக்கப்படும். 20 கிலோ அரிசி தர வேண்டிய இடத்தில் 14 கிலோ அல்லது 16 கிலோ தான் வழங்கப்படும். பருப்பு, கோதுமை, சர்க்கரையும் குறைக்கப்படும். எனவே, குழந்தைகளின் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனே இணைத்துவிடுங்கள். இதற்கிடையே, குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து பெற்றோரிடம் கூட சொல்லாமல் நீக்குவதாக கூறி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

10 கோடி பார்வையாளர்களால் youtube இல் ரசிக்கப்பட்டுள்ளது ஜெயிலர் படத்தின் காவாலா பாடல்

Sat Aug 5 , 2023
ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலை யூடியூபில் 10 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் 10 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் “காவாலா” பாடல் கடந்த மாதம் யூடியூபில் வெளியானது. இந்தப் பாடலும், தமன்னாவின் நடனமும் […]

You May Like