டெல்லியின் ஆம் ஆத்மியம் அரசுக்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. டெல்லியின் அதிகாரம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதில் தொடங்கி, கொள்கையை ரீதியாகவும் இரண்டு கட்சிகளுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.
அத்துடன் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து, எதிர்க்கட்சிகள் ஈடுபட்டிருப்பதால் இரண்டு அவைகளும் முடங்கி இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் மக்களவை கூடியவுடன் கடும் அமளிக்கு மத்தியில் டெல்லி அவசர சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து பேசி உள்ளனர். தலைநகர் டெல்லியில் அரசு நிர்வாகம் தொடர்பான பல்வேறு விவகாரங்களில் ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தான் இந்த அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, காவல்துறை பொது அமைதி போன்ற விவகாரங்களை தவிர்த்து மற்ற துறைகளைச் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை டெல்லி உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
ஆகவே டெல்லி, அந்தமான் நிக்கோபார் லட்சத்தீவு, டாமன் டையு தாத்ரா நகர்வேலி, குடிமைப் பணிகள் போன்ற பிரிவுகளைச் சார்ந்த குரூப் ஏ அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றத்திற்கு ஆணையம் அமைக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இந்த அவசர சட்டத்தின் மூலமாக டெல்லி அரசு அதிகாரிகளின் நியமனம், பணியிட மாற்றம் மற்றும் ஒழுங்கு நடைமுறைகள் மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநரிடமே மறுபடியும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தலைகீழாக மாற்றும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.