ராஜஸ்தானில் உள்ள சஞ்சீவனி கடன் கூட்டுறவு சங்கம் லட்சக்கணக்கான மக்களின் வருமானத்தை மோசடி செய்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூடி வந்தனர். சமம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அவரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோரை 900 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் தொடர்புப்படுத்தி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவதூறாக பேசியதாக அவர் மீது டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கஜேந்திர சிங் ஷெகாவத் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் (ஏசிஎம்எம்) மற்றும் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி, நீதிபதி ஹர்ஜீத் சிங் ஜஸ்பால், ஆகஸ்ட் 7 ஆம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதல்வர் கெலாட்டை ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டார்.