fbpx

போதைப் பொருள் கடத்தல் விவகாரம்.! “முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்” மத்திய அமைச்சர் L.முருகன் வலியுறுத்தல்.!

திமுக முன்னாள் நிர்வாகி போதை கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் L.முருகன் வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. பெரும் நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை இளைஞர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை அனைவரிடமும் போதைப் பொருள்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பழக்கம் இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் என தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர் தமிழகத்தின் தெருக்களிலும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் எளிதாக கிடைக்கிறது தமிழகத்தில் போதை பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. மேலும் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் முதலாளிகளை தமிழக அரசு பாதுகாத்து வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவரை காவல்துறை தேடி வருகிறது. இதனை சுட்டிக்காட்டி பேசிய முருகன் திமுகவின் முன்னாள் நிர்வாகி மூவாயிரம் கோடி ரூபாய்க்கு போதை பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து இருக்கிறார்.

மாநிலத்தில் ஆளும் கட்சியில் இருக்கும் நிர்வாகிகளே போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். டெல்லியில் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவின் முன்னாள் நிர்வாகி ஈடுபட்ட சம்பவம் தற்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது எனவும் அவர் கூறியிருக்கிறார்.

English Summary: DMK Ex organizer involvement in Delhi drug trafficking case. Union minister Murugan demands clarification from CM Stalin.

Read More: TMK| அதிமுகவில் இணைகிறார் த.மா.க இளைஞரணி தலைவர் யுவராஜ்.? எடப்பாடி பழனிச்சாமியுடன் ரகசிய சந்திப்பு.!

Next Post

சுற்றுச்சூழல் பேரழிவு.! அண்டார்டிகாவில் புதுவகை பறவை காய்ச்சல்.! ஏவியன் இன்ஃப்ளுவென்சா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை.!

Mon Feb 26 , 2024
அண்டார்டிகாவின் பிரதான நிலப்பரப்பில், அதிகம் பரவக்கூடிய ஏவியன் இன்ஃப்ளூயன்சா வைரஸ் (HPAIV) இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுக்க கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அண்டார்டிகாவின் பிரதான நிலப்பரப்பில், ஏவியன் இன்ஃப்ளுவென்சா வைரஸ் (HPAIV) எனப்படும் அதிக அளவில் பரவக்கூடிய நோய்க்கிருமி இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பறவைகளிடையே கடுமையான நோயை ஏற்படுத்தக் கூடியது என்றும் […]

You May Like