ஊர்க்காவல் படை இயக்குனரகம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஊர்க்காவல் படையில் ‘DELHI HOME GUARD’ பிரிவில் காலியாக உள்ள 10,285 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. தகுதியும் திறமையும் உடைய நபர்கள் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.சி/எஸ்.டி மற்றும் பி.டபிள்யு.டி பிரிவினருக்கு மத்திய அரசின் சலுகைகளின் படி வயது தளர்வு வழங்கப்படும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 10=ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை வாய்ப்பில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஊர்க்காவல் படை ‘DGHG’ விதிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக மாதம் ரூ.25,000- ரூ.45,000/- வரை வழங்கப்படும் என தெரிகிறது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர விருப்பம் உடைய நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தினை ஊர் காவல் படை இயக்குனரகம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 13.02.2024 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விபரங்களை அறிய homeguard.delhi.gov.in என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.