fbpx

அடி தூள்…! வரும் 26-ம் தேதி மெட்ரோவில் இலவச பயணம் செய்யலாம்…! நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு…!

குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26 ஆம் தேதி டெல்லி கர்தவ்யா பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு மத்திய செயலகம், உத்யோக் பவன் மற்றும் மண்டி ஹவுஸ் ஆகிய மூன்று மெட்ரோ நிலையங்களில் டிஎம்ஆர்சி இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கி டெல்லி மெட்ரோ ரயில் நிர்ஞ உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மெட்ரோவின் எந்த நிலையத்திலிருந்தும் கூப்பன்கள் சேகரிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வியாழன் காலை 04:30 முதல் 08:00 வரை பயணத்திற்கான டிக்கெட்டுகள் அல்லது கூப்பன்கள் வழங்கப்படும். இருப்பினும், இந்த கூப்பன்கள் மூலம் வெளியேறும் வழியை பிற்பகல் 02:00 மணி வரை பெறலாம். குடியரசு தின விழா முடிந்த பிறகு வழக்கம் போல பயணிகள் கட்டணம் செலுத்தி மட்டுமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

யாரும் கடலுக்கு போக வேண்டாம்...! 50 கி‌.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்...! வானிலை மையம் எச்சரிக்கை.‌‌..!

Tue Jan 24 , 2023
27-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை தமிழக கடலோர மாவட்டங்கள்‌, அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ […]
மிரட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! மிரண்டுபோன வானிலை மையம்..!! BIG WARNING..!!

You May Like