உணவு டெலிவரி செய்யும் ’’சோமேட்டோ’’ தற்காலிகமாக சேவையை நிறுத்தியுள்ளதால் வாடிக்கையாளர்கள் உணவு டெலிவரி செய்யும் சேவையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
டெல்லியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. சனிக்கிழமை இரவு ’’சோமேட்டோ’’-வில் உணவு டெலிவரி சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியபோது ’’ நாங்கள் தற்போதைக்கு உணவு ஆன்லைன் டெலிவரி சேவையை வழங்குவதில்லை’’ ’’விரைவில் வருவோம்’’ என்ற வாசகம் பரவத் தொடங்கியது.
3 நாட்கள் ஆகியம் இன்னும் சோமேட்டோ தனது சேவையை தொடங்கவில்லை. இது வரை சேவை நிறுத்தப்பட்டது தொடர்பாக எந்த ஒரு முன்னறிவிப்பையும் நிறுவனம் வெளியிடவில்லை. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் கடந்த 3 நாட்களாக உணவு டெலிவரி சேவையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
பிரபல உணவு டெலிவரி சேவை வழங்கி வரும் சோமேட்டோ நிறுவனம் 500 மில்லியன் வாடிக்கையாளரை கடந்துள்ளது. இது வருகின்ற 2026ல் 1.6 பில்லியனாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது சேவை தற்காலிகமாக நிறுத்தியதை தொடர்ந்து பயனாளிகள் மத்தியில் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
ஆரம்பக்காலத்தில் உணவு டெலிவரி சேவைக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றாலும் போகப் போக ஆன்லைன் டெலிவரி சேவையை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். தற்போது ’’சேமோட்டோ ’’ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் இல்லை என்றால் வயிற்றிற்கு சாப்பாடு இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சோமேட்டோ தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் , மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. போதுமான அடிப்படை வசதிகள் சாலை வசதி போன்றவை இல்லை. இதன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிறந்த சேவையை வழங்க நாங்கள் காத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.