fbpx

அரிசி மீதான 5% ஜிஎஸ்டி திரும்ப பெற கோரி.. நாளை அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டம்…!

ஆளும் மத்திய அரசு உணவுப் பொருளான அரிசி மற்றும் கோதுமைக்கு ஐந்து சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. உணவுப் பொருள்களுக்கான இந்த வரியை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக முழுவதும் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

இது பற்றி சேலம் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் சியாமளநாதன் நிருபர்களிடம் கூறியது, உணவு பொருட்களுக்கு எப்போதும் வரி உயர்வு இருக்கக்கூடாது. மேலும் உணவுப் பொருட்களின் மீது வரி விதித்தால் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை எளிய மக்களாகத்தான் இருப்பார்கள். நாட்டில் ஏழை எளிய நடுத்தர மக்கள் என்பது சதவீதம் பேர் உள்ளனர். இதுவரை அரிசிக்கு எந்த அரசும் வரி விதித்தது இல்லை.‌ இப்போது ஆளும் மத்திய அரசு 5 சதவீதம் ஜிஎஸ்டியை விதித்துள்ளது. இந்த வரி வருகிற 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில், 8000 அரிசி ஆலைகள் இயங்குகின்றன. இந்த அரிசி ஆலைக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நெல் மூட்டைகள் அரவைக்கு வருகிறது. இந்த வகையில் நாள் ஒன்றுக்கு அரிசி ஆலைகளில் 20 ஆயிரம் டன் அரிசி நெல்லிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இதன் மூலம் 300 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் . இந்நிலையில் அரிசியின் மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை நீக்க கோரி நாளை அரிசி ஆலை உரிமையாளர்கள் தமிழ் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம். அரிசி மீதான ஜிஎஸ்டி வரிக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். எனவே மத்திய அரசு உடனடியாக 5 சதவீதம் ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும். மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழ் நாடு முழுவதும் 8000 ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அதனை சார்ந்த லாரி உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரிசி வணிகர்கள், அரிசி வணிகத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

அதுபோல் சேலம் லீ பஜார் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் பாபு கூறும்போது, மத்திய அரசு அரிசி, கோதுமை, உளுந்தம் பருப்பு போன்ற 50 உணவுப் பொருட்களுக்கு, 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. உணவு பொருட்களுக்கு இதற்கு முன்பு ஜிஎஸ்டி விதித்ததில்லை. உணவுப் பொருட்கள் மீது வரி போட்டால் அது பொதுமக்களை தான் பாதிக்கும். உணவு பொருட்கள் மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டியை கண்டித்து அகில இந்திய அளவில் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடக்கவுள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்றும், நாளையும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. சேலத்தில் லீ பஜார் வர்த்தக சங்கத்தினர் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர். சுமார் 300 கடைகள் அடைக்கப்படுகிறது. வணிகர்கள் பொதுமக்கள் நலன் கருதி மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

Baskar

Next Post

ரஜினி படத்தின் டைட்டிலை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன்...!

Fri Jul 15 , 2022
கோலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோவான நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்து தற்போது முன்னணி ஹீரோவாக உயர்ந்து உள்ளார். டாக்டர் மற்றும் டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம், தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அயலான் படமும் திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில் […]
maaveeran

You May Like