fbpx

பாஜகவுடன் இணையும் தேமுதிக..? தொகுதி ஒதுக்குவதில் அடம்பிடிக்கும் பிரேமலதா..!!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்த தேமுதிக, கடந்த மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து களம் கண்ட அந்த தேர்தலில் படுதோல்வியே அக்கூட்டணிக்கு கிடைத்தது. தேனியில் ஓபிஎஸ் மகன் தவிர வேறு யாரும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, கூட்டணிக்கு அதிமுக பிடிகொடுக்கவில்லை. அத்துடன், மிகவும் சொற்பமான தொகுதிகளையே ஒதுக்குவதாக அக்கட்சி தெரிவித்ததால், கடைசி நேரத்தில் அமமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக தோல்வியடைந்தது.

எனவே, மாநில கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெறும் முனைப்பில் மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணியில் இணைய தேமுதிக திட்டமிட்டிருக்கிறது. இதனால், லோக்சபா தேர்தலில் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து தேமுதிக கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால், பாஜக கூட்டணியில் இணைய பிரேமலதா விஜயகாந்த் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், ஒன்றிரண்டு தொகுதிகள் கொடுக்கும் கட்சிகளுடன் இணைய விரும்பாதாக பிரேமலதா, 4 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. ஆனால், தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியமைக்க பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதனால், கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகளில் அக்கட்சி இறங்கிய நிலையில், அதிமுக விலகி விட்டது. ஏற்கனவே, பாஜக கூட்டணியில் இருந்து பாமக, தேமுதிக விலகிய நிலையில், இது அக்கட்சிக்கு அதிர்சியை அளித்துள்ளது. பாஜகவுடன் இனிமேல் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை எனவும் அதிமுக அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளை கைப்பற்றவும் பாஜக தலைமை வியூகங்களை வகுத்து வருகிறது. எனவே, அதிமுக பிடிகொடுக்காத பட்சத்தில், பாமக, தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் மற்றும் சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Chella

Next Post

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: "பயணிகளுக்கு குட் நியூஸ்.." அடுத்தடுத்து தயாராகும் வசதிகள்..!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!

Mon Feb 5 , 2024
சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. முறையான அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் காவல் நிலைய அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர் சேகர்பாபு விரைவில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என உறுதி […]

You May Like