fbpx

டெங்கு காய்ச்சல்..‌ 6 பேர் உயிரிழப்பு…! இது தான் முக்கிய அறிகுறிகள்…! உயிருக்கே ஆபத்து நிகழும்…!

மழைக்காலம் குறித்த கவலையளிக்கும் வகையில், கேரளா மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது, இந்த மாதத்தில் மட்டும் எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 6 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் ஏற்படும் நோய் பருவமழையின் போது எளிதில் பரவக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர், மழைப்பொழிவு அதிகரிப்பால் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காய்ச்சல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது…?

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் 4 நெருங்கிய தொடர்புடைய வைரஸ்கள் ஏடிஸ் வகை கொசுக்களால் பரவுகின்றன. ஏடிஸ் கொசு, டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடிக்கும் போது, டெங்கு வைரஸின் கேரியராக மாறும்.

இந்த கொசு வேறு ஒருவரைக் கடித்தால், அந்த நபருக்கு டெங்கு வைரஸ் தாக்கி டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. மனிதனிடமிருந்து மனிதனுக்கு நேரடியாக வைரஸ் பரவுவது இல்லை. இருப்பினும், டெங்கு காய்ச்சல் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலாக முன்னேறும்.

இது டெங்குவின் கடுமையான வடிவம். உடனடி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தான நிலை உருவாகும்.

அறிகுறிகள்:

காய்ச்சல், உடல் சோர்வு, வயிறு வலி போன்ற அறிகுறிகள் தென்படும். குழந்தைகளின் உடலில் தடிப்புகள் ஏற்படும். கொசு கடித்தது போன்று புள்ளி, புள்ளியாக சிவப்பு நிறத்தில் தோன்றும். டெங்குவில் காய்ச்சல் குறையும்போது, இந்த தடிப்புகள் தெரிய ஆரம்பிக்கும். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், மூன்றாவது நாளில் காய்ச்சல் குறையத் தொடங்கும்.

Vignesh

Next Post

2 ஆண்டாக 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்...! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு...!

Sun Jun 18 , 2023
எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம், தனது முன்னாள் பணிப்பெண்ணின் மகளான 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போலி பழங்கால வியாபாரி மோன்சன் மாவுங்கலுக்கு ஆயுள் தண்டனை விதித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தது. மேலும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கே சோமன் உத்தரவிட்டார். கேரளமாநிலம்‌ எர்ணாகுளம்‌ மாவட்டத்தை சேர்ந்தவர்‌ வியாபாரி மோன்சன்‌மாவுங்கல்‌. இவரது வீட்டில்‌ பணி […]
டெண்டர் முறைகேடு வழக்கு..! சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்துபோன எஸ்.பி.வேலுமணி..!

You May Like