fbpx

வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்!… இனி வீடுகளில் கழிவுநீர் தேங்கினால் ரூ.5000 அபராதம்!

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் களைவு நீரை தேங்காவிட்டால் வீடுகளுக்கு ஆயிரம் ரூபாயும் நிறுவனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் டெங்கு காய்ச்சல் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. இரவு நேரத்தைக் காட்டிலும் பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறிகளும் தெரிவதில்லை. இது வெறும் காய்ச்சலாக மட்டுமல்லாமல், இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே பிரச்சனையாகிவிடும்.

இந்தியாவில் குறிப்பாக ஹரியானா, டெல்லி மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு பகல் பெய்யும் கனமழையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தொடர் மழையால் தேங்கும் மழை நீர் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவு பரவி வருகின்றது.

பொதுவாகவே இந்த டெங்கு காய்ச்சல் பரப்பக்கூடிய கொசு மழை நீர் மற்றும் கழிவு நீர்களில் உற்பத்தி ஆகின்றது. அதனால் பொதுமக்கள் மற்றும் வணிக வளாகத்தினர் தங்களின் இடங்களில் மழை நீரை தேங்காய் விடாமல் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போது டெல்லி அரசு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் களைவு நீரை தேங்காவிட்டால் வீடுகளுக்கு ஆயிரம் ரூபாயும் நிறுவனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Kokila

Next Post

அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் தோறும் ரூ.2,250 ஊக்கத்தொகை...! 18-35 வயதில் உள்ளவர்களுக்கு மட்டுமே...!

Sun Jul 30 , 2023
அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை, கௌரவ ஊதியம் பற்றிய விவரங்களை பார்க்கலாம். அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மாநில அரசு, யூனியன் பிரதேசங்களால் அமைக்கப்பட்ட குழுவால் உள்ளூர் கிராமத்திலிருந்து விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட தகுதியின்படி, மெட்ரிகுலேஷன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் பணிக்கு வயது வரம்பு 18-35 ஆகும். அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் கெளரவப் பணியாளர்களாக இருப்பதால், அரசாங்கத்தால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும் […]

You May Like