fbpx

டெங்கு காய்ச்சலுக்கான மாத்திரை கண்டுபிடிப்பு!… வைரஸுக்கு எதிராக பாதுகாக்கிறது!

ஜான்சன் ஜான்சன் நிறுவனம் உருவாக்கிய டெங்கு காய்ச்சலுக்கான மாத்திரை, அமெரிக்காவில் நடத்தப்பட்ட மனித சோதனையில் ஊக்கமளிக்கும் விளைவுகளை காட்டுவதாக தெரியவந்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் டெங்கு காய்ச்சல் தீவிர அச்சுறுத்தலாக மாறி வருகிறது. டெங்கு காய்ச்சலுகு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இந்தநிலையில், பிரபல ஜான்சன் ஜான்சன் நிறுவனம் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் உடன் இணைந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் டெங்கு காய்ச்சலுக்கான முதல் மாத்திரையை கண்டுபிடித்துள்ளது. சிகாகோவில் நடந்த அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ட்ராபிகல் மெடிசின் அண்ட் ஹைஜீன் ஆண்டு மாநாட்டில் ஆரம்பக் கட்ட தரவுகள் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட மனித சோதனையில் இந்த மாத்திரை டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைரஸின் திரிபுக்கு எதிராக பாதுகாப்பதாக தெரியவந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஜான்சென் பிரிவின் வளர்ந்து வரும் நோய்த்தொற்றுகள் பற்றிய ஆராய்ச்சியின் பொறுப்பாளரான மார்னிக்ஸ் வான் லூக், டெங்குவுக்கு எதிரான வைரஸ் தடுப்பு நடவடிக்கையை முதன்முதலில் வெளிப்படுத்திய மருந்து இதுவாகும் என்று கூறினார்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், 10 தன்னார்வலர்களுக்கு ஒரு வகை டெங்கு ஊசி போடுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு இந்த மாத்திரை அதிக அளவில் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து 21 நாட்கள் மாத்திரை சாப்பிட்டனர். 10 பேரில் ஆறு பேருக்கு நோய்க்கிருமியை வெளிப்படுத்திய பிறகு அவர்களின் இரத்தத்தில் கண்டறியக்கூடிய டெங்கு வைரஸ் காட்டவில்லை, அத்துடன் 85 நாட்கள் கண்காணிப்பில் அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பில் வைரஸ் அறிகுறிகளும் இல்லை என்று தெரியவந்தது.

மேலும், மருந்துப்போலி குழுவில் இடம்பெற்ற ஐந்து பேருக்கு டெங்கு ஊசி போடப்பட்டத்தில் வைரஸ் கண்டறியப்பட்டது. இருப்பினும், அவர்களுக்கு நிலையான மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் டெங்கு நோய் பரவலாக உள்ள சூழலில் டெங்குவின் நான்கு வெவ்வேறு வடிவங்களைத் தடுப்பதற்காக மாத்திரையின் 2-ஆம் கட்ட சோதனைகளை நடத்த ஊக்குவிப்பதற்கும் அதை ஒரு சிகிச்சையாக மதிப்பிடுவது அடுத்த கட்டமாக இருக்கும் என்று ஜான்சன் ஜான்சன் நிறுவனத்தின் கருத்தாக உள்ளது.

இது நீண்ட காலமாக ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் பெரும் கவலையாக இருந்து வருகிறது, இதனால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான நோய்த்தொற்றுகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான இறப்புகள் ஏற்படுகின்றன, மேலும் காலநிலை மாற்றம் காரணமாக கொசுக்கள் மூலம் அதிகளவில் நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது என்று உலக சுகாதாரம் அமைப்பின் தலைமை விஞ்ஞானி ஜெர்மி ஃபரார் இந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

நேற்று முதல்வர் ஸ்டாலின் பேசிய கருத்துக்கு... பாஜக MLA வானதி ஸ்ரீனிவாசன் கொடுத்த பதிலடி...!

Sun Oct 22 , 2023
எதிர்ப்பவர்களை எல்லாம் கைது செய்துவிட்டு பாஜகவை பாசிச கட்சி என்பதா என எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது அறிக்கையில்; பாஜகவைப் பொறுத்தவரை அரசியல் எதிரிகள் மேல் மட்டுமல்லாது, ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடப்பற்று மிக்கவர்கள் என்று எல்லோர் மீதும், அதிகார அத்துமீறல்கள்ஸ மிரட்டல்கள், அடக்குமுறை ஏவப்படுகிறது. அப்படிப்பட்ட சோஷியல் வைரஸைதான் நாம் எதிர்க்கிறோம்” என்றும் முதலைமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். திமுகவிடம் அதிகாரம் வந்த பிறகு, சமூக […]

You May Like