Dengue: பெங்களூரில் திடீரென காய்ச்சல் அதிகரித்து 48 மணி நேரத்தில் ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்தவர் ரவீந்திரன், ஒரு ஸ்டேஷனரி கடை நடத்தி வரும் இவருக்கு வயது மகள் இருந்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி, சிகிச்சை தொடங்குவதற்கு முன்பே 48 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, தனது மகளின் இறப்பின் மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சிறுமியின் தந்தை டெங்கு காய்ச்சலுக்கு எதிரான எச்சரிக்கை சுவரொட்டிகளை தனது கடையில் ஒட்டிவைத்துள்ளார்.
இதுகுறித்து ரவீந்திரன் கூறுகையில், கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தலைவலியால் அவதிப்பட்டு வந்தாகவும், பின்னர், உடல்நிலை மோசமடைந்ததாக பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து, உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கொடுத்ததாகவும், இரவு முழுவதும் நன்றாக இருந்த சிறுமி, அடுத்தநாள் மீண்டும் உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமிக்கு டெங்கு சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மூச்சுவிட சிரமப்பட்டதால் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக செப்டம்பர் 12ம் தேதி சிறுமியை வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இருப்பினும் சிறுமியின் மூளையின் செயல்பாடு வெறும் 10 சதவீதமாகக் குறைந்துவிட்டது, அவள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் சிறுமியின் பல உறுப்புகள் செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 13ம் தேதி சிறுமி உயிரிழந்துள்ளார். மகளின் மரணத்திற்குப் பிறகு, டெங்கு காய்ச்சலுக்கு எதிரான எச்சரிக்கை சுவரொட்டிகளை தனது கடையில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தந்தையின் செயலுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Readmore: கவனம்..! நெல்லை & தென்காசியில் நில அதிர்வு… பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!