fbpx

ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு டெங்கு..!! ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி..!! திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நோய்களின் பரவல் அதிகரிக்கும். அந்த வகையில், தமிழ்நாட்டிலும் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக, டெங்கு பாதிப்பு பல மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ்பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி அபிநிதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் சுமித்ரா தம்பதிக்கு 5 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கடந்த 23ஆம் தேதி யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், டெங்குவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிநிதி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து மருத்துவர்கள் சிறுமியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு உறுதியான நிலையில், அதில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

”மக்களே”... ”இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க”..!! வாக்காளர் பட்டியலில் திருத்தம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Thu Sep 28 , 2023
அக்.27ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அக்டோபர் 27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அக்டோபர் 27ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு […]

You May Like