fbpx

தமிழ்நாட்டில் தீவிரமடையும் டெங்கு..!! காய்ச்சல் வந்தால் தாமதப்படுத்தாதீங்க..!! எச்சரிக்கை..!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி உட்பட இருவருக்கு தற்போது டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், 20 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவிக்கும், சலவன்பேட்டையைச் சேர்ந்த ஆண் குழந்தைக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் மேலும் அதிகரிக்கும் என்பதால், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளை, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். தற்போது வரை தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை டெங்கு பாதிப்பால், 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் சிறிய அளவில் காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனே மருத்துவமனை செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

INDvsSL: 50 ரன்களுக்கு சுருண்டது இலங்கை..! மிரட்டிய சிராஜ்…! ஆசிய கோப்பை இறுதி போட்டி…

Sun Sep 17 , 2023
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா மற்றும் இலங்கை மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீசிச்சை சமாளிக்க முடியாமல் 15.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் (17), துஷன் ஹேமந்தா(13) ஆகிய இருவரை தவிர […]

You May Like