தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஜனவரி முதல் இதுவரை மாநில அளவில் 23,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 180 பேர் வரை புதிய தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழைநீர் தேங்கிய பகுதிகளில் உருவாகும் கொசுக்கள் தான் இந்த தொற்றின் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், மருந்து தெளித்தல் மற்றும் தண்ணீர் தேங்கலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் இந்த பரவல் குறித்து பேசுகையில், தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மழைநீர் தேங்கிய இடங்களை அகற்ற வேண்டும். இல்லையெனில் கொசுக்கள் உருவாகும் சூழல் நீடிக்கும். மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுக்கடி தடுக்கும் வலையையும், க்ரீம்களையும் மக்கள் பயன்படுத்த வேண்டும். சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Read More : மாதம் ரூ.75,000 சம்பளம்..!! IIT Madras-இல் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!