fbpx

வேகமாக பரவும் டெங்கு!… உத்தரகண்டில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!… வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கும் மருத்துவர்கள்!

உத்தரகண்டில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ராய்ப்பூர், டேராடூன் பகுதிகளில் வசிப்பவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களை சோதனை செய்ததில், டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாநில சுகாதார துறை முடுக்கிவிடப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டதில், டேராடூனில் மட்டும் அதிகபட்சமாக, 540 பேருக்கு டெங்கு இருப்பது உறுதியாகிஉள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதாரத் துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்தனர்.

இதில், மாநிலம் முழுதும் 1,106 பேருக்கு டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கும் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.வேகமாக பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

Kokila

Next Post

Wordpad விரைவில் நிறுத்தப்படும்!… Microsoft நிறுவனம் அறிவிப்பு!… ஓன்லைன் வேர்ட் அறிமுகம்!

Mon Sep 11 , 2023
Wordpad-ஐ கூடிய விரைவில், நிறுத்தப் போவதாகவும், அடுத்த அப்டேட்டின் போது அதை முற்றிலுமாக எடுக்கப்போவதாகவும் Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஓஎஸ்-ல் உள்ள ஒரு முக்கியமான பயன்பாடு வேர்ட்பேட் ஆகும். இது லேப்டாப் மற்றும் கணினியில் தகவல்களை எழுதுதல் மற்றும் திருத்துதல் தொடர்பான அனைத்து அடிப்படைப் பணிகளுக்கும் பயன்படுகிறது. இருப்பினும், மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் வேர்ட்பேட் அகற்றப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மைக்ரோசாப்ட் வெளியிட்ட அறிக்கையில், “வேர்ட்பேட் இனி புதுப்பிக்கப்படாது. […]

You May Like