fbpx

அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பு..!! அக்.18ஆம் தேதியே வெளியாகிறது ’லியோ’..!!

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கான இறுதி கட்ட புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அதிகாலை காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால், ஒரு சில விஜய் ரசிகர்கள் பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு சென்று அதிகாலை காட்சியை பார்க்க திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என்பதால் தயாரிப்பாளர் லலித் அதிரடியாக ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளதாக தெரிகிறது.

அதாவது ‘லியோ’ திரைப்படம் ரிலீஸுக்கு முந்தைய நாள் அதாவது அக்டோபர் 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள், பிரீமியர் காட்சிகளாக திரையிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் அக்டோபர் 18ஆம் தேதியே ‘லியோ’ திரைப்படம் பிரிமியர் காட்சிகளாக திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Chella

Next Post

’சோகத்தை பற்றி கிண்டல்’..!! ’அந்த 2 பேருக்கு மட்டும் புரிஞ்சா போதும்’..!! கமல்ஹாசன் அதிரடி..!!

Sun Oct 8 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில் விஜய் வர்மாவுக்கு ஸ்ட்ரைக் அட்டையை கமல்ஹாசன் காண்பித்தார் என்பதும் இதே போன்ற 3 முறை ஸ்ட்ரைக் அட்டையை பெற்றவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார். இந்நிலையில், வெளியான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில், மாயா ஸ்ட்ரைக் குறித்து தனது கருத்தை தெரிவிக்கிறார். விஜய்க்கு ஸ்ட்ரைக் கொடுத்தது சரியான முடிவு தான். ஆனால், அதேபோல் இன்னும் இரண்டு பேர் இந்த […]

You May Like