காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21 முதல் 30 வரை தேர்வுகள் நடைபெற்ற நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு 10ம் தேதியும் , ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 13ம் தேதி வரையிலும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தனியார் பள்ளிகள் மீது புகார்கள் குவிந்தன.
இதனால் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுத் தேர்வு எழும் மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் மாவட்ட கல்வி அலுவலகங்களில் அனுமதி பெற்று சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம் ஆனால் முழு நாளாக அந்த வகுப்புகள் நடைபெற அனுமதியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.