fbpx

அட்டகாசம்…! வங்கி அதிகாரிகளுக்கு ஓய்வூதியம், பயிற்சிப் பட்டறை…!

வங்கி அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் பயிற்சிப் பட்டறை.

குடும்ப ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக, ஓய்வூதியக் கொள்கை மற்றும் ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குதலில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓய்வூதிய விதிகளில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 50 ஆண்டுகளில் பல ஆணைகள்/அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவை ஒருங்கிணைக்கப்பட்டு, 2021 டிசம்பரில் மத்திய சிவில் சர்வீஸ் விதிகள், 2021-ஆகக் கொண்டு வரப்பட்டுள்ளன. ஓய்வூதியம் வழங்குவதில் முக்கியப் பங்கு வங்கிகளுக்கே என்பதால், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையானது வங்கிகளின் மத்திய ஓய்வூதிய செயலாக்க மையங்கள் மற்றும் வங்கியில் ஓய்வூதியம் தொடர்பான பணிகளைக் கையாளும் களப்பணியாளர்களுக்கான விழிப்புணர்வுப் பட்டறைகளைத் தொடங்கியுள்ளது.

Vignesh

Next Post

அந்தமானை அதிரவைத்த நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கையா..? பீதியில் உறைந்த மக்கள்..!!

Mon Mar 6 , 2023
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகநாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், சுமார் 50,000 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டம் ஆகின. இதனை அடுத்து, இந்தியா உள்பட பல பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் […]

You May Like