fbpx

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி..? திருமாவளவன் பரபரப்பு பேட்டி..!!

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? என்பது குறித்து தான் கருத்து சொல்ல எதுவும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் நடித்துள்ள ‘தோழர் சேகுவேரா’ திரைப்படம் செப்.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி என்பது திமுகவின் உட்கட்சி விவகாரம். அதில் தான் கருத்து சொல்ல எதுவும் இல்லை என்று தெரிவித்தார். துணை முதலமைச்சர் பதவி குறித்து, முதலமைச்சருக்கு அனைத்து அமைச்சர்களும் துணையாக தான் உள்ளோம் என்றும் இந்த கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிப்பாரா என்ற கேள்விக்கு ‘வலுத்துள்ளது ஆனால் பழுக்கவில்லை’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்திருந்தனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி துணை முதலமைச்சர் ஆவார் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பனும், உதயநிதிக்கு துணை முதலமைச்சர் ஆக தகுதியுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : வினேஷ் போகத்துக்கு பதக்கம்..? இன்று தீர்ப்பு வழங்குகிறது சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம்..!!

English Summary

Deputy Chief Minister post for Udayanidhi? Thirumavalavan said that he has nothing to comment on.

Chella

Next Post

அசரவைக்கும் அமெரிக்காவின் பதக்க எண்ணிக்கை!. மீண்டும் ஆதிக்கத்தில் சீனா!. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

Sun Aug 11 , 2024
America's medal count for Asarawa!. China dominates again! How many places for India?

You May Like