fbpx

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது மீண்டும் சர்ச்சை.. தேவையில்லாமல் பிரச்சனை ஆக்கிடாதீங்க..!! – உதயநிதி ஸ்டாலின்

தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியபோது மைக்கில் கோளாறு எற்பட்டது. மைக் கோளாறு காரணமாக தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் பாடப்பட்டது என துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசின் திட்டம் மற்றும் செயலாக்கத் துறை சார்பில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழக அரசின் விழாக்கள், துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த நிகழ்விலும் பாடப்பட்டது.

அதில் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, ஒருசில வரிகள் விடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்களை மீண்டும் பாடுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் தமிழக அரசு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில்தான் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில் தமிழ்த் தாய் வாழ்த்தை யாரும் தவறாக பாடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திடீரென மைக்கில் கோளாறு ஏற்பட்டு யாருக்கும் கேட்காமல் போய்விட்டது. அதனால்தான் அவர்களை மீண்டும் பாட வைத்தோமே தவிர, அவர்கள் தவறாக பாடினார்கள் என்பதற்காக அல்ல என விளக்கி அந்த சர்ச்சைக்கு உதயநிதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

முன்னதாக, டிடி தொலைக்காட்சியின் இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் பங்கேற்ற போது தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வரி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read more ; தீபாவளி பண்டிகைக்கு தரமாக வெளியாகும் 6 திரைப்படங்கள்..!! கோலிவுட் முதல் பாலிவுட் வரை..!! லிஸ்ட் இதோ..!!

English Summary

Deputy Chief Minister Udhayanidhi Stalin explained that the Tamil Thai greeting was repeated due to a microphone malfunction.

Next Post

ரத்தன் டாடா உயில்.. கடைசி வரை உடன் இருந்த வளர்ப்பு நாய், சமையல்காரருக்கு பங்கு..!!

Fri Oct 25 , 2024
Ratan Tata's will: 'Unlimited' care for dog Tito, share for longtime butler

You May Like