fbpx

உல்லாச ஆசை..!! காதல் கணவன் படுகொலை..!! கள்ளக்காதலனை பழிதீர்க்க ஸ்கெட்ச் போட்ட கள்ளக்காதலி..!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (26). இவர், பொன்னேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவரும், மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான விஷ்ணுவும், புழல் சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, விஷ்ணுவுக்கு லட்சுமணனின் மனைவி ரம்யாவுடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.

இதை தட்டிக் கேட்ட லட்சுமணனை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த ஜூன் 23ஆம் தேதி விஷ்ணு படுகொலை செய்தார். இந்த வழக்கில் விஷ்ணு, தம்பி விஷால் உட்பட 5 பேரை கைது செய்த மீஞ்சூர் போலீசார் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஷ்ணு, விஷால் ஆகியோரின் வீட்டிற்கு சென்ற மர்ம கும்பல், அந்த வீட்டில் இருந்த மூவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

இதில் விஷ்ணுவின் தந்தை ரகு (48), தாய் ஜெயபாரதி (42), விஷாலின் மனைவி அர்ச்சனா (21) ஆகிய மூவரும் படுகாயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லஷ்மணன் மனைவி ரம்யா தமது காதல் கணவனை கொலை செய்த கள்ளக்காதலன் விஷ்ணுவை பழி தீர்ப்பதற்காக கணவனின் சகோதரர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுடன் ரம்யா சென்றுள்ளார்.

கள்ளக்காதலன் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற ரம்யா, தான் ஒரு பெண் காவலர் எனவும் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். காவலர் என கூறியதால் வீட்டின் கதவை திறந்துள்ளனர். அப்போது, ரம்யாவுடன் வந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த மூவர் மீது பெட்ரோல் ஊற்றி அவர்களது நகைகளை பறித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீட்டில் இருந்த மூவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மீஞ்சூர் போலீசார் ரம்யா (24), மாரன்ராஜ் (29), திருப்பதி (22) ஆகிய மூவரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.

Read More : உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Ramya went to Kallakadalan’s house in the middle of the night and said that she is a policewoman and that an investigation should be conducted.

Chella

Next Post

பியூட்டி பார்லரில் ஹேர் வாஷ்.. பார்லர் ஸ்ட்ரோக் நோய் ஏற்பட வாய்ப்பு..!! அறிகுறிகள் இதுதான்..

Thu Oct 3 , 2024
Hair wash in beauty parlour.. possibility of parlor stroke..!! These are the symptoms.

You May Like