fbpx

விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகளின் விவரம்..!! இனி ஈசியா தெரிஞ்சிக்கலாம்..!! புதிய இணையதளம் தொடக்கம்..!!

வீட்டு வசதி வாரிய திட்டங்களில், விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகளின் விவரங்களை எளிதாக அறிய, புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதி திட்டங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. கோட்ட அலுவலகம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களில், வீடுகள் இருப்பு அறிய, அந்த அலுவலகத்தை பொதுமக்கள் அணுகுகின்றனர். ஆனால், அங்குள்ள பணியாளர்கள் முறையான விவரங்களை வழங்குவதில்லை.

இதேபோன்று, வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை செலுத்துவதிலும், வாடகை செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதற்காக சில ஆண்டுகளுக்கு முன், வீட்டுவசதி வாரியத்திற்கென ஒரு இணையதளம் துவக்கப்பட்டது. அதில் முழுமையான விவரங்கள், கிடைப்பதில்லை என புகார் எழுந்தது. இந்த இணையதளமும் முறையாக செயல்படாமல் முடங்கியது.

இதற்கு தீர்வாக, புதிய இணையதளம் ஏற்படுத்த வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது. அதன்படி, தற்போது tnhb.tn.gov.in என்ற பெயரில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை, வாரிய தலைவர் பூச்சி முருகன் துவக்கி வைத்தார். இதில், வாரிய நிர்வாக இயக்குனர் சரவண வேல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Chella

Next Post

ஜனவரி 1 முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு தடை..!! ஏன் தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Sat Dec 23 , 2023
2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாது என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) அறிவித்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் முதன்மையாக இருப்பது யுபிஐ பரிவர்த்தனை தான். அனைத்து வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களும் யுபிஐ சேவையை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் போன்றவை பிரபலமாக இருக்கின்றன. இந்நிலையில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் […]

You May Like