1990-களில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் தேவயானி. ’தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், திரையுலகில் கவர்ச்சி காட்டாமல் சாதிக்க முடியும் என்று நிருபித்தார். 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 22ந் தேதி மும்பையில் பிறந்த இவரது தந்தை ஒரு கன்னடர், இவரது தாய் மலையாளி. ஆனாலும், இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார். இவர் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல், ரசிகர்களை கவர்ந்த சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த கோலங்கள் நாடகத்திற்கு இன்றளவும் பல ரசிகர்கள் உள்ளனர்.
காதல் கோட்டை வெற்றிக்கு பின்னர் தேவையானி தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தது. குறிப்பாக சரத்குமார் ஜோடியாக அவர் நடித்த நாட்டாமை திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக உள்ளது. மேலும், 1997-ஆம் ஆண்டு வெளியான ‘சூரிய வம்சம்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் சரத்குமார் நடித்திருந்தார். இதில் மகன் சரத்குமாருக்கு ஜோடியாக தேவையானி நடித்திருந்தனர். இந்த படத்தில் தனது தங்கையின் திருமணத்தில் அணைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்யும், சரத்குமார் கடைசியாக சாப்பிடுவது போல் ஒரு காட்சி இருக்கும்.
அந்த காட்சியில், தேவயானி தனது கணவர் சரத்குமாருக்கு ஊட்டி விடுவது போல் ஒரு சீன் இருக்கும். இந்த காட்சியில், சரத்குமாருக்கு ஊட்டிவிடுவதற்காக மதியமே ஸ்பெஷல் மீல்ஸ் வாங்கி வைக்கப்பட்ட நிலையில், அந்த காட்சியை எடுக்க இரவாகிவிட்டது. அதற்குள் அவருக்கு வாங்கி வைத்த உணவு கெட்டுப் போய் விட்டது. இதனால், சரத்குமாருக்கு தேவயானி கெட்டுப்போன உணவை ஊட்டிய போதிலும், எதுவும் சொல்லாமல் அந்த காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக சரத்குமார் சாப்பிட்டுள்ளார். இந்த டேக் ஓகே ஆன பின்னர், வாஷ் பேசினுக்கு சென்ற சரத்குமார் வாந்தி எடுத்துள்ளார். இதனால் பதறிப்போன விக்ரமன், சரத்குமாரிடம் விசாரித்துள்ளார். அப்போது தான் சாப்பாடு கெட்டுப்போன விஷயமே அவருக்கு தெரிய வந்துள்ளது. இந்த தகவலை விக்ரமன் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Read more: ஸ்வெட்டர், சாக்ஸ் அணிந்து தூங்கவே கூடாது… ஏன் தெரியுமா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..