fbpx

தேவர் ஜெயந்தி..!! அசம்பாவிதங்களை தவிர்க்க பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்..!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு வரும் அக்டோபர் 30ஆம் தேதி (இன்று) குருபூஜை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் தேவர் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் வரும் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற இருப்பதால் எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில், பாதுகாப்பு கருதி வரும் 28, 29, 30 ஆகிய 3 தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி, இன்று (அக்டோபர் 30) தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதலே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், புதுக்கோட்டையிலும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! சம்பள உயர்வுடன் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை..!! வெளியாகும் அறிவிப்பு..!!

Mon Oct 30 , 2023
வங்கி ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை விரைவில் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசு நிர்வகிக்கும் வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. அந்த வகையில், ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு அளிக்கலாமா? என்பது குறித்தும், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. இந்த தகவலை பிரபல நாளிதழ் […]

You May Like