தென்காசி மாவட்டத்தில் தேவர்ஜெயந்தி விழாவின்போது மின்சாரம் தாக்கி 18வயது இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் கோவிந்தாபேரியில் வடக்கு தெருவில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். 18 வயதான முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில்இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வந்துள்ளார்.
அக்டோபர் 30 ம் தேதி தேவர் ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதை அப்பகுதி மக்கள் கோலாகலமாக கொண்டாட முடிவெடுத்து நேற்று இரவு கொடிக்கம்பத்தில் பெயிண்ட் அடித்து நடும் பணியில் ஈடுபட்டார்கள்.
அங்கிருந்த மின்சார கம்பியானது கொடிக்கம்பத்தின் மீது உரசியது. சரியாக நேரத்தில் முத்துக்குமார் கொடிக்கம்பத்தில் ஏற முயற்சித்துள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி அடிக்கப்பட்ட முத்துக்குமார் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இது பற்றி போலீசார் தகவல் அறிந்து விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.