fbpx

விஸ்வரூபமெடுக்கும் டெங்கு..!! பள்ளி, கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!!

டெங்கு பாதிப்பு காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் உள்பட அங்கன்வாடி நிலையில் உள்ள பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை அனைத்து கல்வி நிலையங்களும் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது.

19ஆம் நூற்றாண்டில் அதிகமாகப் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலவும் பிரதான பிரச்சனையாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. தற்போது தீவிரமழை தொடங்கியுள்ளதால், பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி, அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், அசாம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தீவிர டெங்கு காய்ச்சல் பரவலால், தடுப்பு நடவடிக்கையாக திபு நகராட்சி வாரியம் மற்றும் திபு பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் உள்பட அங்கன்வாடி நிலையில் உள்ள பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை அனைத்து கல்வி நிலையங்களும் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது.

விஸ்வரூபமெடுக்கும் டெங்கு..!! பள்ளி, கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!!

அதன்படி, இன்று முதல் வருகிற 12ஆம் தேதி வரை இந்த விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு பரவலை தடுக்க 10 குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 20 ஆயிரம் பேரை கண்காணிக்க அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

Chella

Next Post

திருப்பதிக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.. வழியில் பயங்கரம்.!

Mon Nov 7 , 2022
திருவள்ளூர் மாவட்ட பகுதியில் திருத்தணி அருகாமையில், தமிழக ஆந்திர எல்லையான பொன்பாடி பகுதியில், சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. நேற்று அந்த சோதனைச் சாவடி அருகே வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், பலத்த காயங்களுடன் இருந்த வாலிபரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். […]

You May Like