fbpx

பக்தர்களே..!! இன்று மாலை 6 மணிக்கு ரெடியா..? இதை செய்தால் தோஷம் நீங்கும்..!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு..!!

திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்படமான நெய் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு சர்வதேச அளவில் பிரபலமானது. இந்நிலையில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பியிருந்தார். அதில், விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக அறிவித்ததோடு, அதற்கான ஆய்வு அறிக்கையையும் வெளியானது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, கலப்படமான நெய் பயன்படுத்தப்பட்டதால் இன்று திருப்பதியில் தோஷ நிவாரண சாந்தி யோகம் இன்று காலை நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் மூலவர் சன்னதி, லட்டு, அன்னபிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளிக்கப்பட்டது. இந்நிலையில் தான், திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, அனைத்து பக்தர்களும் தங்களது வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, “ஓம் நமோ வெங்கடேசாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே நமஹ” என மந்திரம் படிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விளக்கேற்றி மந்திரம் படித்தால், கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷம் விலகும் என நம்புவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Read More : ’என்னுடைய திரை வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்’..!! ’இனி நடிக்க மாட்டேன்’..!! அதிரடியாக அறிவித்த பிரபல நடிகர்..!!

English Summary

Tirupati Devasthanam requests all devotees to light lamps at their homes today at 6 pm

Chella

Next Post

செக்ஸ் வாழ்வில் அதிக திருப்தி..!! இந்த பழக்கத்தை கைவிட்டாலே போதும்..!! அந்த பிரச்சனை வராது..!!

Mon Sep 23 , 2024
In women, this habit causes the ovarian reserve to decrease. This leads to dryness in the genital area and pain during intercourse.

You May Like