காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இக்கோயில் சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. சனிபகவானின் தோஷம் நீங்க விரும்புவோர், இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய “போகமார்த்த பூண்முலையாள்” என்று தொடங்கும் பதிகம் பாடுவது நல்லது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் பல ஆண்டுகளாக மோசடி அரங்கேறி வந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோயிலின் அதிகாரப்பூர்வ வெப்சைட் எனக்கூறி தரிசனம், அர்ச்சனை, அபிஷேகத்திற்கு கோடிக்கணக்கில் மோசடி கும்பல் வசூலித்து வந்துள்ளது. இதில், வெளிநாடு, வெளி மாநிலம் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாந்துள்ளனர். இந்த மோசடியில் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் முதல் முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.