fbpx

கோவில் திருவிழாக்களில் இனி இது இருக்க கூடாது……! டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு..….!

ஆலயங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு மனு வழங்கப்பட்டால் 7 நாட்களுக்குள் விழா குழுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல கோவில் விழாக்களில் கலாச்சார நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் ஆபாச காட்சிகள் ஆபாச நடனம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

அதோடு நிகழ்ச்சிகள் எதுவும் இரவு 10 மணிக்கு மேல் நடத்தப்பட கூடாது எனவும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பெண் கலைஞர்களுக்கு இழுப்பு ஏற்படும் விதத்தில், ஆபாச ஆடையில் சித்தரிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Next Post

இந்தப் படத்திற்கு இனி கட்டணம் கிடையாது..!! அமேசான் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு..!! ரசிகர்கள் குஷி..!!

Fri Jun 2 , 2023
‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில், உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட படமாகும். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், […]

You May Like