கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர், தனுஷ். இவரும், நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுமார் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தாங்கள் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
சமீப காலமாக இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து இருவருமே உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில், இந்த தகவலை நெட்டிசன்கள் பலர் உறுதிப்படுத்த தொடங்கினர். தனுஷ்-ஐஸ்வர்யா பிரிந்து வாழ முடிவு செய்தார்களே அன்றி, அவர்கள் இருவரும் இன்னும் சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சினிமா வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவலில், அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்திருப்பதாக பரவி வரும் செய்தி முற்றிலும் பொய். இருவரில், ஒருவர் வேறு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் இவர்கள் முறைப்படி விவாகரத்து செய்து கொள்வர். தனுஷ்-ஐஸ்வர்யா ஒன்றிணைந்து வாழவில்லை என்றாலும் இருவரும் தங்களது குழந்தைகள் மீது மிகவும் பாசம் வைத்திருப்பதாகவும் ஒன்றாக சேர்ந்துதான் குழந்தைகளை வளர்ப்பதாகவும் கூறப்படுகிறது.
விவாகரத்து பெற காரணம் என்ன..?
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் விவாகரத்து பெற்ற காரணம் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. அதில் முக்கியமாக தனுஷ் பல நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வருகிறார் என்பதுதான். இவருடன் படங்களில் சேர்ந்து நடிக்கும் நடிகைகளுக்கு அடுத்தடுத்து விவாகரத்து நடைபெற்றதையும் ரசிகர்கள் நோட்டம் விட்டு, அதற்கு காரணம் தனுஷ்தான் என்ற முடிவிற்கும் வந்தனர். ஆனால், தனுஷ்-ஐஸ்வர்யா பிரிந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.