தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடி வருகின்றனர். இவர், நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகவே அதில் இருந்து எந்த ஒரு வீடியோவும் வெளியாகவில்லை. கடந்த வாரம் தான், நயன்தாரா திருமண வீடியோடிவின் டிரைலர் வெளியானது. அதில், நானும் ரவுடி தான் படத்தின் போட்டோவை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி கேட்டு தனுஷ் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் திருமண வீடியோவை வெளியிட தனுஷ் தடையாக இருந்ததாகவும், NOC-க்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்ததாகவும் கூறினார். இதனால், திருமண வீடியோவில் இருந்து நானும் ரவுடிதான் படத்தின் பாடல்கள், போட்டோக்கள் என அனைத்தையும் நீக்கிவிட்டு, செல்போனில் எடுத்த சில காட்சிகளை மட்டுமே வீடியோவில் பதிவிட்டுள்ளோம். ஆனால், அந்த டிரைலரில் இருக்கும் வெறும் 3 விநாடிக்காக தனுஷ் ரூ.10 கோடி கேட்டதாக நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
நயன்தாராவும் தனுஷும் ஏற்கனவே, நெருக்கமான தோழர்களாக இருந்துள்ளனர். புதுச்சேரியில் கூட இருவரும் உல்லாசமாக ஊர் சுற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது நட்பு நன்றாக சென்று கொண்டிருந்தபோது தான், விக்னேஷ் சிவன் நடுவில் வந்து ஆட்டத்தை கலைத்துள்ளார். இது தனுஷுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், தனுஷின் தந்தை ஒரு சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். அவர் கூறுகையில், ”இந்த நெட்பிளிக்ஸ் விவகாரம் எனக்கு தாமதமாக தான் கிடைத்தது. என் மகன் பின்னாடி பேசுபவர்கள் பற்றி என்றுமே கவலைப்பட மாட்டார். அவர் தனது பட வேலைகளை மட்டும் கவனித்து வருகிறார். நாங்கள் முன்னோக்கி செல்கிறோம். NOC சான்றிதழ் வழங்குவதற்காக நயன்தாரா இரண்டு வருடம் காத்திருந்ததாக சொல்வதெல்லாம் உண்மை கிடையாது” என்று கூறியுள்ளார்.
Read More : இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் ரூ.56,000..!! திருமணமாகாதவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!!