fbpx

“சூப்பர் ஸ்டாருக்கே சிரமத்தை கொடுத்துட்டேன்..” தமிழர்கள் குறித்த கொச்சைப்பதிவு..!! பகிரங்க மன்னிப்பு கேட்ட தன்யா பாலகிருஷ்ணன்.!

லைக்கா நிறுவன தயாரிப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். இந்தத் திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ராஜா ராணி மற்றும் கார்பன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணா. இவரால் சலாம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டர் இணையதளத்தில் தமிழர்களையும் சிஎஸ்கே அணியையும் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் தன்யா பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்ததாக ட்விட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து தமிழர்களை கொச்சைப்படுத்தும் ஒருவருக்கு ஐஸ்வர்யா வாய்ப்பு கொடுக்கலாம்.? என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பதிவு பற்றி விளக்கம் அளித்திருக்கிறார் தன்யா பாலகிருஷ்ணன். இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டு இருக்கும் அவர் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். தனது பெயரில் தமிழக மக்களை கேவலப்படுத்தும் விதமாக நடந்து கொண்ட செயலுக்கு மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருக்கிறார். 12 வருடங்களுக்கு முன்பு சிஎஸ்கே அணி பற்றியும் தமிழர்கள் பற்றியும் தனது பெயரில் வெளியான பதிவு வேறொரு நபரால் சித்தரிக்கப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார் .

சர்ச்சைக்குரிய அந்த கருத்து துரதிஷ்டவசமாக தனது பெயரில் வெளியாகியதாக தெரிவித்த அவர் அதற்கு வருத்தம் தெரிவித்து தமிழர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சர்ச்சையால் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சர்ச்சை தொடர்பாக பலத்த கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் தன்யா பாலகிருஷ்ணன்.

Next Post

ஆண்களே.! படுக்கையறையில் மனைவியை மகிழ்ச்சி படுத்த இதை சாப்பிடுங்க போதும்.!?

Fri Feb 2 , 2024
நவீனகாலகட்டத்தில் துரித உணவுகளாலும், வேகமான வாழ்க்கை முறையினாலும் பல ஆண்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தையின்மை பிரச்சனை, மனைவியை திருப்திபடுத்த முடியாமல் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளினால் மன அழுத்தம் ஏற்பட்டு பல ஆண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக ஆணுக்கும், பெண்ணுக்கும் தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சினை மற்றும் குழந்தையின்மை பிரச்சனை சமூகத்தில் மதிப்பிழந்து தன்னம்பிக்கை குறைய செய்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு மருத்துவரை […]

You May Like