fbpx

“செம வாய்ப்பு… Tnpsc Group- l தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…! ஆர்வம் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்…!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ TNPSC Group-I 2022 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு 16.08.2022 அன்று தருமபுரி மாவட்டவேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ காலை 10.00 மணி முதல்‌ வகுப்புகள்‌ துவங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொள்ள விருப்பம்‌ உள்ளவர்கள்‌ https://cutt.ly/2Zmak31 என்ற Google படிவத்தில்‌ விண்ணப்பிக்கவும்‌. மேலும்‌ விவரங்களுக்கு தொலைபேசி எண்‌ 04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்‌.1380 ரோபர-1- 2022 போட்டித்‌ தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள தகுதி வாய்ந்தவர்கள்‌ இலவச பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொடூர தாக்குதல்.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி...

Sat Aug 13 , 2022
நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. மேற்கு நியூயார்க்கில் உள்ள சௌடௌகுவா கல்வி நிறுவனத்தில் சல்மான் ருஷ்டி சொற்பொழிவு ஆற்றவிருந்தார்.. அவரின் பெயர் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது மர்ம நபர் ஒருவர், சல்மான் ருஷ்டியை பலமுறை கத்தியால் குத்தினார்.. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ருஷ்டியின் கல்லீரல் குத்தப்பட்டு சேதம் அடைந்ததாக அவரது முகவர் […]

You May Like