fbpx

தர்மபுரி அருகே…..! 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கி வந்த போலி மருத்துவர் அதிரடி கைது…..!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சிலர் மருத்துவ கல்வித்தகுதியின்றி கிளினிக் நடத்தி வருவதாக தர்மபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகளின் இணை இயக்குனர் மருத்துவர் சாந்திக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து இணை இயக்குனர் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி பாலக்கோடு பகுதியில் மருந்து ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியம் சந்திரா மேரி கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் போன்ற ஒரு அடங்கிய குழுவினர் பாலக்கோடு அருகே உள்ள எழுங்களப்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில் அருகே உள்ள கெட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் 48 என்பவர் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு மெடிக்கல் ஸ்டோர் ஒன்றை நடத்தி வந்ததும், அந்த மெடிக்கல் ஸ்டோரில் கடந்த 10 வருடங்களாக நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை வழங்கி வந்ததும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, அவருடைய மெடிக்கல் ஸ்டோருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதோடு பாலக்கோடு காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட புகாரை அடுத்து காவல்துறையினர் முருகேசன் கைது செய்து மருத்துவ சிகிச்சை வழங்க அவர் பயன்படுத்தி வந்த உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Post

காதலியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த வழக்கில் காதலன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்….! எச்ஐவி பாதிப்பு இருந்ததால் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை….!

Sat Jun 10 , 2023
மகாராஷ்டிரா மாநிலத்தில் மிரா என்ற பகுதியில் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சரஸ்வதி மனோஜ் உள்ளிட்ட இருவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, காவல்துறை நடக்க தகவல் கொடுக்கப்பட்டது காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது சரஸ்வதி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார். மேலும் […]

You May Like