fbpx

கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்க்கு தூக்கிக் கொடுத்த தோனி..!! கதறும் ரசிகர்கள்..!! ட்விட்டரில் ட்ரெண்டிங்..!!

ஐபிஎல் தொடரின் 17-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்க போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது.

2024ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை (மார்ச் 22) முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த 15 ஆண்டுகளாக ஆர்சிபி அணி, சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்ற ஆர்சிபி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஏற்கனவே இறங்கிவிட்டனர். இந்நிலையில் தான், ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனிக்கு பதில், ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஐபிஎல் தொடர் தொடங்கவுதற்கு முன்னர் அனைத்து அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அந்த வகையில், சிஎஸ்கே கேப்டனாக பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் கேப்டனாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Read More : ”மெசேஜ் அனுப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள்”..!! மத்திய அரசை எச்சரித்த தேர்தல் ஆணையம்..!!

Chella

Next Post

Bank | ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் செயல்படும்..!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Thu Mar 21 , 2024
பொருளாதார ஆண்டின் கடைசி நாளான மார்ச் 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை வங்கிகளுக்கு பொருளாதார ஆண்டாக கணக்கிடப்படுகிறது. முதல் நாள் மற்றும் கடைசி நாளில் வங்கிகள் கட்டாயம் வேலை செய்யும். அந்த வகையில், இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி ஆண்டின் கடைசி நாளாகும். அன்று ஞாயிற்றுக்கிழமை […]

You May Like