fbpx

IND vs ENG| ‘Dhuruv Jurel’ அதிரடியில் மீண்ட இந்தியா.! 10 ரன்களில் சதத்தை தவறவிட்ட சோகம்.. இங்கிலாந்து 46 ரன்கள் முன்னிலை.!

IND vs ENG: இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் உரையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இந்தியா மட்டும் இங்கிலாந்த அணிகளுக்கிடையான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அனுபவம் மிக்க வீரர் ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக ராபின்சன் 58 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும் முஹம்மது சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 219 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் துரு ஜுரல் மற்றும் குள் டிபியாதவ் ஆகியோர் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் துருவ் ஜுரல் அதிரடியாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். இவருக்கு உறுதுணையாக நின்று ஆடிய குல்தீப் யாதவ் 28 ரன்களில் அவுட் ஆனார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜுரல் 90 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். இறுதிவரை தனி ஆளாக போராடிய அவர் 149 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 90 ரன்களில் கிளீன் போல்டானார். இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ரன்களை விட 46 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.

இந்தியா 177 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து பின்தங்கி இருந்தபோது ஜுரல் மற்றும் குல்தீப் யாதவ் 8 வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டனர். ஜுரல் இறுதிவரை சிறப்பாக விளையாடி இந்தியா 300 ரன்கள் கடக்க உதவினார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளும் டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்

English Summary: 4th test between India and England in an interesting position. Dhruv Jurel takes India close to England first innings score. Missed his well-deserved century by just 10 runs.

Next Post

Farmers: விவசாய பயிர் பாதிப்பு...! திமுக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய கோரிக்கை...!

Sun Feb 25 , 2024
வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் கொட்டித்தீர்த்த பெருமழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.160 கோடி நிவாரணம் வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் ஒப்பிடும் போது, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீடு போதுமானதல்ல. […]

You May Like