fbpx

Annamalai: ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த வீடியோ…? உண்மை செய்தி என்ன…?

அண்ணாமலை தனக்கு ஆரத்தி எடுத்த பெண்மணிக்கு பணம் கொடுப்பது போன்ற வெளியாகிய வீடியோவின் உண்மை என்ன..?

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் கோவை மக்களவைத் தொகுதியும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரச்சாரத்திற்கு சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனக்கு ஆரத்தி எடுத்த பெண்மணிக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், வீடியோவின் உண்மை நிலை குறித்தான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உண்மை என்ன…?

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் “என் மண் என் மக்கள்” யாத்திரையின் பொழுது மீனவர் வீட்டிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்றிருந்தார். அப்போது அங்கே அவரை பெண் ஒருவர் ஆரத்தி எடுத்து வரவேற்றார். அப்பொழுது தன்னுடைய கையில் இருந்த பணத்தை எடுத்த அந்த பெண்மணியிடம் கொடுத்தார். அந்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vignesh

Next Post

இந்தியாவில் புல்லட் ரயிலுக்கான வழித்தடம் எப்படி இருக்கும்? புகைப்படம் வெளியீடு!

Fri Mar 29 , 2024
நாட்டிலேயே முதல் முறையாக மும்பை – அகமதாபாத் வரை புல்லட் ரயில் இயக்கப்பட இருக்கிறது. புல்லட் ரயிலுக்கான வழித்தடம் எப்படி இருக்கும் என்பதை காட்டும் வகையில் புகைப்படத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நமது நாட்டின் ரயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், அதிவேகமாக பயணிக்கும் புல்லெட் ரயில் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இந்தியாவில் […]

You May Like