ஆஸ்திரேலிய பெண் ரசிகர் ஒருவர் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நிலவில் நிலம் வாங்கி அதைப் பத்திரப் பதிவு செய்து அனுப்பி வைப்பது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஷாரூக் கான், ஒரு ஆஸ்திரேலியப் பெண், ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளில் எனக்காக நிலவில் ஒரு சிறிய நிலத்தை வாங்குகிறாள். லூனார் ரிபப்ளிக் சொசைட்டியிலிருந்து இந்த நிலத்திற்கான பத்திரப்பதிவு சான்றிதழ்களைப் பெற்றேன். அவள் எனக்கு வண்ணமயமான மின்னஞ்சல்களை எழுதுகிறாள் (ஒரு வரியில் சிவப்பு, ஒன்று நீலம் மற்றும் பல). உலகளவில் பலரின் அன்பைப் பெற்றதற்கு நான் பாக்கியமாக உணர்கிறேன்” என்று கூறினார்.
மேலும் இதுகுறித்து அந்த ரசிகை கூறியதாவது, ஆம், கிங் கானுக்கு சந்திரனில் நிலத்தில் ஒரு நிலத்தை வாங்கியது உண்மைதான், அவர் சந்திரனில் முதல் ஹிந்தி பட ஹீரோவாக வர வேண்டும் என்று நான் விரும்பினேன்! அவர் எப்பொழுதும் எல்லாவற்றிலும் முதலாவதாக இருக்க வேண்டும் என்று கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், சந்திரனில் சொத்து வைத்திருக்கும் ஒரே இந்திய நடிகர் அவர் அல்ல. பாலிவுட்டின் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.