தல தோனி ஸ்டைலில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு தனது ஓய்வை தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (37). விக்கெட் கீப்பிங் மட்டுமின்றி, சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமையும் பெற்றவர். கடந்த 2004ஆல் இந்திய அணியில் இடம் பிடித்தார் தினேஷ் கார்த்திக். இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

2022 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக், அதன் காரணமாக இந்திய டி20 அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.
வீடியோவை காண… https://www.instagram.com/reel/ClTXsDHoaS5/?igshid=YzdkMWQ2MWU=