தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சேதமடைந்துள்ள பொது கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமானங்கள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில்தான் சென்னையில் நேற்றில் இருந்து பல்வேறு வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திடீர் நோட்டீஸ்களுக்கு பின் முக்கிய காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கட்டிடங்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக தலைமை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில், மேலும் முக்கியத்துவம் வாய்ந்த பொது இடங்களான பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், மருத்துவமனைகள், ஆரம்ப நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் இதர முக்கிய கட்டமைப்புகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, வருகிற 30.09.2023-க்குள் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து பொதுமக்களின் நலன் பேணப்பட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டங்களிலும் கண்டறியப்பட்டுள்ள கட்டடங்களில் பழுதுநீக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட கட்டடங்கள் மற்றும் சிதிலமடைந்து இடிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகியவை குறித்து ஒரு விரிவான மற்றும் முழுமையான அறிக்கையினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.
எனவே, பொது மக்களின் பாதுகாப்பு நலனை உறுதி செய்வது நமது தலையாய கடமை. சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு இந்நடவடிவக்கைகள் தொடர்பான அறிக்கையை மேற்கொண்டு அரசினுடைய மேலான கவனத்திற்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.