fbpx

’விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா’..? ’திருந்தாத ஜென்மங்கள்’..!! லியோ ட்ரெய்லரை கடுமையாக சாடிய ராஜேஸ்வரி பிரியா..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்ட நிலையில், படத்திலிருந்து போஸ்டர்கள், இரண்டாவது சிங்கிள் வெளியானது. அவைகளுக்கு ரசிகர்கள் பக்கா ரெஸ்பான்ஸை கொடுத்தனர். இந்நிலையில், லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

இப்படி ஒருபக்கம் ட்ரெய்லரை பலரும் கொண்டாடிக் கொண்டிருந்தாலும் விஜய் லியோ ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை பேசியது அதுவும் ஒரு பெண்ணை இழிவுப்படுத்தும் சொல்லில் பேசியது பெரும் பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது. அதேபோல் நா ரெடிதான் பாடலிலும் போதை, வன்முறையை குறிக்கும் வரிகள் வந்ததால் அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சூழலில் நா ரெடிதான் பாடலின் வரிகளை குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்த ராஜேஸ்வரி ப்ரியா லியோ ட்ரெய்லரை வைத்து விஜய்யையும், லோகேஷ் கனகராஜையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “லியோ ட்ரெய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது (1.46 நிமிடத்தில்) அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா? திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? என குறிப்பிட்டு விஜய்யை டேக் செய்துள்ளார். மேலும், அவர் ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், லோகேஷ் கனகராஜை தகுதியில்லாத இயக்குநர் என்றும் திரைப்படத் துறை முன்வந்து இதனை எதிர்க்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

தொழிற் பயிற்சி பெரும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் மாதம் ரூ.750 ஊக்கத்தொகை...! எப்படி விண்ணப்பிப்பது...?

Fri Oct 6 , 2023
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.750 வழங்கப்படும். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில் புதியதாக துவங்கியுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு 30.09.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு சேர்க்கை நடைபெற்று வந்தது. மேலும் தற்போது 10.10.2023 வரை நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) […]

You May Like